Home மாநில செய்திகள் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற இயந்திரத்தை பயன்படுத்த திட்டம்: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

காலி மது பாட்டில்களை திரும்பப் பெற இயந்திரத்தை பயன்படுத்த திட்டம்: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

0

காலி மது பாட்​டில்​களை திரும்ப பெற, இயந்​திரத்தை பயன்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ள​தாக, டாஸ்மாக் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

வனப்​பகு​தி​கள் மற்​றும் சுற்​றுலாத் தலங்​களில் காலி மது​பாட்​டில்​கள் வீசப்​படு​வ​தால், வனவிலங்​கு​கள் பாதிக்​கப்​படு​வது தொடர்​பான வழக்​கில், காலி மது​பான பாட்​டில்​களை திரும்ப பெறும் திட்​டத்தை நடை முறைப்படுத்த சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதைத் தொடர்ந்​து, டாஸ்​மாக் நிர்​வாகம் கடந்த 2023-ம் ஆண்டு நீல​கிரி​யிலும், பின்​னர், பல்​வேறு மாவட்​டங்​களி​லும் இந்த திட்​டத்தை அமல்​படுத்​தியது. இதற்​கிடையே, சென்னை உட்பட ஒரு சில மாவட்​டங்​களில் இந்த திட்​டத்​துக்கு டாஸ்​மாக் கடை பணி​யாளர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

கடை பணி​யாளர்​களை கொண்டு இந்த திட்​டத்தை செயல்​படுத்​தாமல், மாற்று வழிகளில் செயல்​படுத்த வேண்​டும் என வலி​யுறுத்தி வந்​தனர்.

இந்​நிலை​யில், காலி மது​பாட்​டில்​களை பெற இயந்​திரத்தை பயன்​படுத்த டாஸ்​மாக் நிர்​வாகம் திட்​ட​மிட்​டு, அதற்​கான பணி​களை மேற்​கொண்டு வரு​கிறது. ஏற்​க​னவே, பிளாஸ்​டிக் பாட்​டில்​களை மறுசுழற்சி செய்ய இயந்​திரம் பொது இடங்​களில் வைக்​கப்​பட்​டது.

அதில், காலி பிளாஸ்​டிக் பாட்​டிலை கொடுத்​தால், அதற்கு பணம் அல்​லது மஞ்​சப்பை போன்ற பொருட்​கள் வழங்​கப்​பட்​டது. அந்த இயந்​திரம் போலவே மது பாட்​டில்​களை திரும்ப பெற, இயந்​திரத்தை டாஸ்​மாக் நிர்​வாகம் அறி​முகப்​படுத்த உள்​ளது.

தற்​போது, அந்த இயந்​திரத்தை சோதனை செய்​யும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. அதன்​படி, டாஸ்​மாக்​கில் மது வாங்​கும் போது கூடு​தலாக ரூ.10 பெற்று அதில் ஒரு க்யூஆர் குறி​யீடு கொண்ட ஸ்டிக்​கர் ஒட்​டப்​படும்.

அந்த ஸ்டிக்​கரை இயந்​திரத்​தில் குறிப்​பிடப்​பட்ட இடத்​தில் ஸ்கேன் செய்​யும் போது பாட்​டிலை செலுத்த வாயில் திறக்​கப்​படும். அதில் பாட்​டிலை கொடுக்​கும் போது இயந்​திரம் ரூ.10-ஐ வழங்​கும்.

இந்த இயந்​திரம் தற்​போது சோதனை கட்​டத்​தில் இருப்​ப​தாக​வும், விரை​வில் செயல்​பாட்​டுக்கு கொண்​டு வரப்​படும்​ என அதி​காரிகள்​ தெரிவித்​தனர்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version