Home கன்னியாகுமரி செய்திகள் பெருஞ்சாணி: அணையில் மீன் பிடிக்க சென்றவர் மூழ்கி பலி

பெருஞ்சாணி: அணையில் மீன் பிடிக்க சென்றவர் மூழ்கி பலி

0

பெருஞ்சாணி அருகே உள்ள வலிய மலை, காணி குடியிருப்பை சேர்ந்தவர் குமார் (45). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு கீதா என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகளும் உள்ளனர். சம்பவ  தினம் இரவு குமார் தன் உறவினர்களுடன்  பெருஞ்சாணி அணையில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.  

      இதற்கிடையே குமார் தன்னுடன் மீன் பிடிக்க வந்த உறவினர்களிடம்  தான் வீட்டுக்கு செல்வதாக  கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் நேற்று முன்தினம் மதியம் வரை வீடு திரும்பவில்லை. இதை எடுத்து குமாரின் மனைவி கீதா குலசேகரம்  போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி குமாரை தேடி வந்தனர்.

       இந்த நிலையில் நேற்று மாலையில் குமாரின் பிணம் பெருஞ்சாணி அணையில் மூழ்கிய நிலையில் கிடப்பதாக அப்பகுதியினர் பார்த்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரின் உடலை மீட்டு, குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version