பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு, ‘பத்தா’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ படங்களுக்குப் பிறகு இவர்கள் 3-வது முறையாக இணையும் படம் இது. இதில் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்துக்கு செல்வகுமார் எஸ்கே ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ், ஸ்டார் ஸ்டூடியோ 18 மற்றும் சினி 1 ஸ்டூடியோ புரொடக் ஷன் இணைந்து தயாரிக்கின்றன. இதன் முதல் தோற்ற போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு அக். 1-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளது.
