Home சினிமா செய்திகள் உண்மைச் சம்பவ கதையாக உருவாகும் ‘பனங்காட்டான்’

உண்மைச் சம்பவ கதையாக உருவாகும் ‘பனங்காட்டான்’

0

கிடுகு, கந்தன் மலை ஆகிய படங்களை இயக்கிய வீரமுருகன் அடுத்து இயக்கும் படம், ‘பனங்காட்டான்’.

ரைஸ்மேக்கர்ஸ் புரொடக்‌ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் சந்திரசேகரன் தயாரித்துள்ள இப்படத்தில் அப்புக்குட்டி, காதல் சுகுமார், அரிசி கணேசன், சேரன் ராஜ், கனிமொழி, பீட்டர் சரவணன், மெய் ராஜன், விமல் ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுந்தர்.என், இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படம் பற்றி வீரமுருகன் கூறும்போது, “இது தென் மாவட்டத்தில் நடக்கும் உண்மைச் சம்பவம் ஒன்றைத் தழுவி உருவாக்கப்பட்ட படம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கென்று கட்டுப்பாடு வைத்து, அதை மீறி யாரும் உள்ளே வரக்கூடாது, வெளியே போகக் கூடாது என்று இன்று வரை கடைப்பிடித்து வருகின்றனர்.

அது என்ன மாதிரியான கட்டுப்பாடு, அது என்னென்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை இப்படம் சொல்லும். படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியாகும்” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version