Home விளையாட்டு செய்திகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை இழந்தது பாகிஸ்தான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை இழந்தது பாகிஸ்தான்

0

சிட்னியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 32, ஆரோன் ஹார்டி 28, கிளென் மேக்ஸ்வெல் 21, ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 20 ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை குவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் ரன் குவிப்பில் தேக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹரிஸ் ரவூப் 4, அப்பாஸ் அப்ரிடி 3, சுஃபியான் முகீம் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

148 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக உஸ்மான் கான் 52, இர்பான் கான் 37 ரன்கள் சேர்த்தனர். முகமது ரிஸ்வான் 16, பாபர் அஸம் 3, சாஹிப்சாதா ஃபர்ஹான் 5, சல்மான் ஆகா 0 ரன்களில் நடையை கட்டினர்.ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்பென்சர் ஜான்சன் 5, ஆடம் ஸாம்பா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. கடைசி மற்றும் 3-வது போட்டி நாளை (18-ம் தேதி) ஹோபர்ட் நகரில் நடைபெறுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version