Home சினிமா செய்திகள் “மிகச் சிறந்த மகாகாவியத்தை உலகம் முழுவதும் பார்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” – ‘ராமாயணம்’...

“மிகச் சிறந்த மகாகாவியத்தை உலகம் முழுவதும் பார்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” – ‘ராமாயணம்’ தயாரிப்பாளர்

0

இந்திப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். 2 பாகங்களாக உருவாகும் இதில், ராவணனாக யாஷ் நடிக்கிறார். காஜல் அகர்வால் ராவணன் மனைவி மண்டோதரியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி , ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோட், தி சூசைட் ஸ்குவாட் உள்பட பல ஹாலிவுட் படங்களில் ஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றிய கய்நோரிஸ் இதன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். இதன் முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும் 2-ம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இதன் தயாரிப்பாளரான பிரைம் போகஸ் நமித் மல்ஹோத்ரா, இதன் பட்ஜெட் ரூ.4 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று தெரிவித்துள்ளார்.

“இரண்டு படத்துக்குமான பட்ஜெட் சுமார் 500 மில்லியன் டாலர்களாக இருக்கும். அதாவது ரூ. 4 ஆயிரம் கோடிக்கு மேல் ஆகும். இது ஒரு மகாகாவியம் என்பதால், ஒவ்வொரு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்துகிறோம். ஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது இது அதிகம் இல்லை. உலகின் மிகச்சிறந்த மகாகாவியத்தை உலகம் முழுவதும் பார்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version