Home தேசிய செய்திகள் மியான்மர் உல்பா-ஐ அலுவலகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவ உயர் அதிகாரி தகவல்

மியான்மர் உல்பா-ஐ அலுவலகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவ உயர் அதிகாரி தகவல்

0

குவாஹாட்டி: அசாம் ஐக்கிய சுதந்திர முன்னணி-இண்டிபென்டன்ட் (உல்பா-ஐ), அசாம் மாநிலத்துக்கு தனி நாடு அந்தஸ்து கோரி வருகிறது. மத்திய அரசால் தடை செய்யப் பட்ட இந்த அமைப்பின் கிழக்கு தலைமையகம் மியான்மர் எல்லையில் உள்ளது.

இதன் மீது இந்திய ராணுவம் நேற்று அதிகாலையில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் நயன் மெதி உட்பட 19 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 19 பேர் காயமடைந்ததாகவும் உல்பா-ஐ அமைப்பு நேற்று தெரிவித்தது. ஆனால் இந்திய ராணுவம் இதை மறுத்துள்ளது.

இதுகுறித்து ராணுவ (குவா ஹாட்டி) மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் கூறும்போது, “இந்த தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தவில்லை’’ என்றார்.

இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, “உல்பா-ஐ அமைப்பினர் மீது அசாம் போலீஸார் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை. இதுபோல அசாம் மண்ணில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படவில்லை.

ராணுவம் தாக்குதல் நடத்தி இருந்தால் அதுகுறித்து அறிக்கை வெளியாகி இருக்கும். ஆனால் ராணுவம் சார்பிலும் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை’’ என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version