Home கன்னியாகுமரி செய்திகள் நித்திரவிளை: மரம் ஏறும் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

நித்திரவிளை: மரம் ஏறும் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

0

கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 70 வயதான பேபி என்ற தென்னை மரம் ஏறும் தொழிலாளி, நேற்று தென்னை மரத்தில் ஏறி ஓலையை வெட்டிக் கொண்டிருந்தபோது, ஓலை மின்கம்பி மீது விழுந்தது. அதை எடுத்தபோது மின்சாரம் தாக்கி அவர் கீழே விழுந்தார். குழித்துறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version