திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்ற மனைவி வீடு திரும்பாததால் கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார். சின்னத்துறை ஜூட்ஸ் காலனியை சேர்ந்த மீனவர் ஜெர்பின் (32) என்பவரின் மனைவி சுபினா (24) நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் ஆலயத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், நித்திரவிளை காவல் நிலையத்தில் ஜெர்பின் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
