Home தேசிய செய்திகள் நீட் போராட்டம்: மாணவர்​கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

நீட் போராட்டம்: மாணவர்​கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

0

நீட் போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாணவர்​கள் மீதான வழக்கை சிறப்பு அதி​காரம் மூலம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்​து, டெல்​லி​யில் கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி திட்​ட​மிட்​டிருந்த பேரணியை கை விடு​வ​தாக உச்ச நீதி​மன்​றத்​தில் தெரி​வித்​துள்​ளது. கடந்த ஜூலை மாதம் போராட்​டங்​களில் ஈடுபட்ட மாணவர்​கள் மீது பல்​வேறு காவல் நிலை​யங்​களில் எப்​ஐஆர் பதிவு செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில், இதுதொடர்​பான வழக்கை விசா​ரித்த உச்ச நீதிமன்​றம் மாணவர்​கள் மீது பதிவு செய்​யப்​பட்ட வழக்​கு​களை ரத்து செய்​யு​மாறு மத்​திய, மாநில அரசுகளுக்கு அறி​வுறுத்​தி​யது. இதனையடுத்து மத்​திய அரசு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் ஒரு புதிய மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில் மாணவர்​களின் எதிர்காலத்​தைக் கருத்​தில் கொண்​டு, உச்ச நீதி​மன்​றம் தனது தனிப்​பட்ட சிறப்பு அதி​கார​மான அரசி​யல் சாசனப் பிரிவு 142-ஐ பயன்​படுத்​தி, மாணவர்​கள் மீது பதிவு செய்​யப்​பட்​டுள்ள அனைத்து எப்​ஐஆர் களை​யும் ரத்து செய்ய வேண்​டும் என கோரிக்கை வைத்​திருந்​தது.

இந்த மனு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிப​தி​கள் ஜாய்​மால்யா பக் ஷி மற்​றும் வி. மோகனா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், டெல்​லி, பிஹார், மகா​ராஷ்டி​ரா, மேற்கு வங்​கம் மற்​றும் அசாம் ஆகிய மாநிலங்​களில் ஜூலை 20 முதல் 25 வரை நடை​பெற்ற போராட்​டங்​கள் தொடர்​பாகப் பதிவு செய்​யப்​பட்ட எப்​ஐஆர் அனைத்​தும் அரசி​யல் சாசனப் பிரிவு 142-ஐ பயன்​படுத்தி ரத்து செய்​யப்​படு​வ​தாக உத்​தர​விட்​டனர்.

மேலும், பிற மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் பதிவு செய்​யப்​பட்ட இதே​போன்ற எப்​ஐஆர்​கள் மீதும் மேற்​கொண்டு எந்த விசா​ரணை​யும் நடத்​தக் கூடாது என்​றும், இந்த போராட்​டங்​கள் தொடர்​பாக புதிய எப்​ஐஆர்​களைப் பதிவு செய்ய தடை விதித்​தும் உத்​தர​விட்​டனர். அதே​நேரம் தீவிரக் குற்​றங்​களில் ஈடு​பட்ட 2,873 நபர்​கள் மீது டெல்லி காவல் துறை ஒரே புதிய எப்​ஐஆர் பதிவு செய்து சட்​டப்​பூர்வ நடவடிக்கை எடுக்க அனு​மதி அளித்​தனர்.

மேலும், நீட் 2026 தேர்வு குளறு​படி​யால் தற்​கொலை செய்​து​கொண்ட மாணவர்​களின் குடும்​பங்​களுக்கு இழப்​பீடு வழங்க அகில இந்​திய அளவி​லான கொள்​கையை மாநில அரசுகளு​டன் கலந்​தாலோ​சித்து மத்​திய அரசு 3 மாதங்​களுக்​குள் உரு​வாக்க வேண்​டும் என்​றும் நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர். அதேவேளை​யில் இந்த உத்​தர​வானது சிறப்​புச் சூழலைக் கருத்​தில் கொண்டு பிரிவு 142-ன் கீழ் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ள​தால், இதனை எதிர்​கால வழக்​கு​களில் முன்​மா​திரி​யாகப் பயன்​படுத்த முடி​யாது என்​றும் நீதிப​தி​கள் தெளிவுபடுத்​தினர்.

அப்​போது, சிஜேபி சார்​பில் அதன் இணை ஒருங்​கிணைப்​பாளர் சவுரவ் தாஸ் ஆஜராகி, உச்ச நீதி​மன்​றத்​தின் இந்த உத்​தரவு மற்​றும் மத்​திய அரசின் உறு​தி​மொழியை ஏற்று செப்​டம்​பர் 5-ம் தேதி டெல்​லி​யில் நடத்​தத் திட்​ட​மிட்​டிருந்த அமை​திப் பேரணி​யைத் திரும்​பப் பெறு​வ​தாகக் தெரி​வித்​தார். அதற்கு தலைமை நீதிப​தி, “இரு தரப்​பின் இந்த இணக்​க​மான முடிவை வரவேற்​கிறோம். இருதரப்​பும் இணைந்து செயல்​பட்​டால்​ எந்​தவொரு சிக்​கலான பிரச்​சினைக்​கும்​ தீர்​வு காண முடி​யும்​” என குறிப்​பிட்​டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version