Home கன்னியாகுமரி செய்திகள் முட்டம்: தாய், மகள் கொலை; மீனவருக்கு இரட்டை ஆயுள்

முட்டம்: தாய், மகள் கொலை; மீனவருக்கு இரட்டை ஆயுள்

0

முட்டம்: பவுலின் மேரி (48), அவரது தாயார் தெரசம்மாள் (90) ஆகியோர் கடந்த 5. 6. 2022 அன்று இரவில் தங்கள் வீட்டில் கொலை செய்யப்பட்டு, 14 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த வெள்ளிச்சந்தை போலீசார், கடியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி அமல சுமன் (42) என்பவரைக் கைது செய்தனர். நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி தனசேகரன் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினார். கொலை செய்த அமல சுமனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version