Home மாநில செய்திகள் மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

0

பரு​வ​மழை​யால் பாதிப்பு ஏற்​ப​டாத வகை​யில், மெட்ரோ திட்​டப்​பணி​கள் நடை​பெறும் இடங்​களில் தேவை​யான முன்​னெச்​சரிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: வரவிருக்​கும் பரு​வ​மழை காலத்தை எதிர்​கொள்​வதற்​காக, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம், பெருநகர சென்னை மாநக​ராட்​சி, நெடுஞ்​சாலைத்​துறை மற்​றும் தமிழக சாலை மேம்​பாட்டு நிறு​வனம் ஆகிய​வற்​றுடன் இணைந்து தீவிர முன்​னெச்​சரிக்கை பணி​களை மேற்​கொண்டு வரு​கிறது.

இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் அனைத்து வழித்​தடங்​களி​லும் முன்​னெச்​சரிக்கை நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

நீர் இறைக்​கும் பம்​பு​கள்

மில்​லர்ஸ் சாலை, ஸ்டெர்​லிங் சாலை, ஆண்​டர்​சன் சாலை, ஆற்​காடு சாலை (போரூர் சந்​திப்​பு), சாஸ்​திரி நகர், வில்​லி​வாக்​கம், பெரம்​பூர் (டேங்க் லிங்க் சாலை), மவுண்ட் பூந்​தமல்லி சாலை மற்​றும் இந்​திரா நகர் உள்​ளிட்ட மெட்ரோ திட்​டத்​தின் மூன்று வழித்​தடங்​களி​லும், வெள்​ளப் பாதிப்பு ஏற்பட வாய்ப்​புள்​ள​தாகக் கண்​டறியப்​பட்ட இடங்​களில் போது​மான திறன் கொண்ட நீர் இறைக்​கும் பம்​பு​கள் நிறுத்​தப்​பட்​டுள்​ளன.

ஒக்​கி​யம் மடுவு பகு​தி​யில் உள்ள ஒட்​டுமொத்த 98 மீட்​டர் நீளப் பகு​தி​யும் முழு​மை​யாகச் சுத்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் மழைநீர் எவ்​வித தடை​யுமின்றி சீராக வெளி​யேறு​வது உறுதி செய்​யப்​பட்​டு, அப்​பகு​தி​யில் வெள்ள பாதிப்​பு​கள் தடுக்க நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version