Home மாநில செய்திகள் பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தில் பாதுகாப்பு அனுமதி பெற்று 5 மாதங்கள் ஆகியும் மெட்ரோ ரயில்...

பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தில் பாதுகாப்பு அனுமதி பெற்று 5 மாதங்கள் ஆகியும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவில்லை

0

இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க, பாது​காப்பு அனு​மதி அளிக்​கப்​பட்டு 5 மாதங்​களை கடந்​தும் இது​வரை முதல் ரயில் சேவை தொடங்​கப்​பட​வில்​லை.

இத்​தடத்​தில் மெட்ரோ ரயிலை இயக்க பொது​மக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். சென்​னை​யில் மெட்ரோ ரயில் முதல் கட்​டம், முதல் கட்ட நீட்​டிப்பு திட்​டம் நிறைவடைந்​து, விமான​நிலை​யம் – விம்​கோநகர் வரை​யும், பரங்​கிமலை – சென்னை சென்ட்​ரல் வரை​யும் என இரண்டு வழித்​தடங்​களில் மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

இந்த ரயில்​களில் தினசரி 3 லட்​சம் பேர் பயணிக்​கின்​றனர். இதற்​கிடை​யில், இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் ரூ.63,246 கோடி மதிப்​பில் 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித்​தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது. இவற்​றில் கலங்​கரை விளக்​கம் – பூந்​தமல்லி பைபாஸ் வரையி​லான 4-வது வழித்​தடம் ஒன்​றாகும்.

இத்​தடத்​தில், கலங்​கரை விளக்​கம் முதல் கோடம்​பாக்​கம் மேம்​பாலம் வரை சுரங்​கப்​பாதை​யாக​வும், கோடம்​பாக்​கம் பவர்​ஹவுஸ் முதல் பூந்​தமல்லி பைபாஸ் வரை உயர்​மட்​டப்​பாதை​யாக​வும் அமை​கிறது.

9 சுரங்க மெட்ரோ ரயில் நிலை​யங்​களும், 18 உயர்​மட்ட மெட்ரோ ரயில் நிலைங்​களும் இடம்​பெற உள்​ளன. தற்​போது, பல்​வேறு இடங்​களில் சுரங்​கப்​பாதை, உயர்​மட்​டப்​பாதை பணி​கள் தீவிர​மாக நடை​பெறுகின்​றன.

இதற்​கிடை​யில், 4-வது தடத்​தில் ஒருபகு​தி​யாக, பூந்​தமல்லி – வடபழனி வரை 14.6 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில் வழித்​தடம் கடந்த பிப்​ர​வரி​யில் அமைக்​கப்​பட்​டது.

இத்​தடத்​தில், மெட்ரோ ரயில் பாது​காப்பு ஆணை​யரின் பல கட்ட சோதனை​களுக்கு பிறகு, இத்​தடத்​தில் மெட்ரோ ரயில் இயக்க கடந்த பிப்​ர​வரி மாத இறு​தி​யில் அனு​மதி வழங்​கப்​பட்​டது.

இதன்​பிறகு, மார்ச்​சில் மெட்ரோ ரயில் சேவை தொடங்​கும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால், சட்​டப்​பேரவை தேர்​தல் நடத்தை விதி​கள் காரண​மாக, தாமத​மானது. தேர்​தல் முடிந்​து, தவெக அரசு ஆட்​சிக்கு வந்து 5 மாதங்​களை கடந்​தும் மெட்ரோ ரயில் சேவை தொடங்​கப்​பட​வில்​லை.

இதற்​கிடை​யில், தவெக தலை​வரும், தமிழக முதல்​வரு​மான விஜய், இரண்டு வாரங்​களுக்கு முன்​பு, இத்​தடத்​தில் மெட்ரோ ரயி​லில் பயணித்து ஆய்வு செய்​தார். இதைத்​தொடர்ந்​து, தமிழக பட்​ஜெட் கூட்​டத்​தொடரிலும் இந்த மெட்ரோ ரயில் சேவை மிக விரை​வில் மக்​கள் பயன்​பாட்​டுக்கு வரும் எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

இருப்​பினும், மெட்ரோ ரயில் சேவை தொடங்​கு​வது தொடர்​பாக எந்​த​வித அறி​விப்​பும் இல்​லாமல் உள்​ளது. இத்​தடத்​தில், விரை​வில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க வேண்​டும் என பொது​மக்​கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

இது குறித்​து, மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “இத்​தடத்​தில் ரயில் சேவை தொடங்​கு​வது தொடர்​பாக நாங்​கள் மத்​திய அரசுக்கு வேண்​டு​கோள் விடுத்து உள்​ளோம். இதற்​கான அதி​காரப்​பூர்வ தொடக்க விழாவுக்கு அவர்​கள் நேரம் ஒதுக்கி கொடுத்​த​பிறகு, ரயில் சேவை தொடங்​கும்” என்​றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version