Home கன்னியாகுமரி செய்திகள் மார்த்தாண்டம்: வணிகர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு

மார்த்தாண்டம்: வணிகர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு

0

மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வர்த்தக சங்க அரங்கத்தில் நேற்று (அக்.,10) நடைபெற்றது. புதிய தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜா செல்வராஜ் வரவேற்று பேசினார். புதிய செயலாளர் சுரேஷ் குமார் அறிமுக உரை நிகழ்த்தினார்.

விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரம் ராஜா புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: –  வணிகர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நீங்கள் முதல் ஆளாக நிற்க வேண்டும். மார்த்தாண்டம் மேம்பாலம் பழுதுபோட்டுள்ளது. இது உடனே சீரமைக்கப்பட வேண்டும். அணுகு சாலை முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த சாலை போக்குவரத்துக்கு தகுதி இல்லாமல் மிகவும் மோசமாக உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். என கூறினார். இந்த விழாவில் மார்த்தாண்டம் காவல் உட்கோட்ட துணை போலிஸ் சூப்பிரண்ட் நல்ல சிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version