Home கன்னியாகுமரி செய்திகள் மார்த்தாண்டம்: கஞ்சா விற்ற 3 கல்லூரி மாணவர்கள் கைது

மார்த்தாண்டம்: கஞ்சா விற்ற 3 கல்லூரி மாணவர்கள் கைது

0

நட்டாலம் 4 வழிச்சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மார்த்தாண்டம் சப்-இன்ஸ்பெக்டர் பெனடிக்ட் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்களை  போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.

அதில் அவர்களிடம் அரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர்கள் மூன்று பேரையும் மார்த்தாண்ட போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் ஒருவர் கேரள மாநிலம் துறையூர் பகுதியை சேர்ந்த பாபு என்பவர் மகன் விபின் (19) என்பதும், மற்றொருவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதி சலீம் மகன் சாதிக் ( 25) என்பதும், இருவரும்  நட்டாலம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது.

மேலும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஞானசேகர் மகன் பெனின் ( 19)  இவர் அதே பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. இவர்கள் கேரளாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து குமரி மாவட்டத்தில் விற்றனர். போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து மூன்று மாணவர்களையும் கைது செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version