Home கன்னியாகுமரி செய்திகள் மண்டைக்காடு: ஆழ்துளை கிணற்றில் திருட்டு

மண்டைக்காடு: ஆழ்துளை கிணற்றில் திருட்டு

0

மண்டைக்காடு அருகே உள்ள பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் சேவியர் பால்ராஜ் (55). லாரி டிரைவர். புதிய வீடு ஒன்றை இவர் கட்டி வருகிறார். இவரது வீட்டின் முன் பகுதியில் ஆள்குழாய் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்த பிவிசி பைப் மற்றும் நீரில் மூழ்கக் கூடிய இயந்திர பாகங்கள், கேபிள் வயர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் நேற்று திருடி சென்றனர். இதன் மொத்த மதிப்பு ரூபாய் 20 ஆயிரம் ஆகும். இதுகுறித்து சேவியர் மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version