Home சினிமா செய்திகள் ‘காமெடி படங்கள் எடுப்பது ரொம்ப கஷ்டம்’ – ஆர்.கே.செல்வமணி

‘காமெடி படங்கள் எடுப்பது ரொம்ப கஷ்டம்’ – ஆர்.கே.செல்வமணி

0

இயக்குநர் எழில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். இவர் இயக்கத்தில் விமல் நடித்த ‘தேசிங்குராஜா’ படம் 2013-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அதன் இரண்டாவது பாகம் ‘தேசிங்குராஜா 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக ஜனா நடித்துள்ளார். பூஜிதா பொனாடா, ஹர்ஷிதா, ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, புகழ், ராஜேந்திரன், மதுமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு செல்வா.ஆர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்ஃபினிட்டி கிரியே
ஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில், பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி பேசும்போது, “காமெடி படங்கள் எடுப்பது ரொம்ப கஷ்டம். அதனால்தான் என் படங்களில் பெரும்பாலும் காமெடியே இருக்காது. இயக்குநர் எழில் இந்தப் படத்தில் பத்து இயக்குநர்களை நடிக்க வைத்தது போல, அடுத்த படத்தில் பத்து தயாரிப்பாளர்களைக் கட்டாயம் நடிக்க வைக்க வேண்டும். மக்களுக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை மாற்றிக்கொண்டு படங்களைக் கொடுக்கக்கூடியவர் எழில். எப்படி நம்மைப் படம் எடுக்க வேண்டாம் என்று சொன்னால் கோபப்படுவோமோ அதேபோலத்தான் யூடியூப்பில் விமர்சனம் பண்ணுபவர்களை, பண்ண வேண்டாம் என்று சொன்னால் கோபம் வரும். அது மட்டுமல்ல ஒரு படத்தைப் பற்றி நல்லபடியாக விமர்சனம் பண்ணினால்கூட அதைப் பார்ப்பதற்கு இங்கே ஆள் இல்லை. விமர்சனம் பண்ணுவதைத் தடுக்க முடியாது. ஆனால் படம் வெளியாகி ஒரு நாளுக்கு பிறகு விமர்சனம் செய்யலாம். இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version