டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மதுரை பேந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மதுரை அணி தகுதி சுற்று 1-ல் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை எதிர்கொண்டிருந்தது. இந்த ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்தாகியிருந்தது. எனினும் லீக் போட்டியில் அதிக வெற்றிகளை குவித்ததன் அடிப்படையில் மதுரை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கோவை கிங்ஸ் அணி எலிமினேட்டரில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்த்து விளையாடி இருந்தது. இந்த ஆட்டமும் மழை காரணமாக ரத்தாகியிருந்தது. எனினும் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இருந்த கோவை அணி தகுதி சுற்று 2-க்கு முன்னேறியது.
தகுதி சுற்று 2-ல் கோவை அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்து இருந்தது.
