Home தேசிய செய்திகள் லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி அன்மோல் அமெரிக்காவில் கைது

லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி அன்மோல் அமெரிக்காவில் கைது

0

குஜராத்தின் சபர்மதி சிறையில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளார். சிறையில் இருந்தபடியே அவர் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் மீதும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அவரை கைது செய்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி மத்திய அரசு அமெரிக்காவிடம் கோரியது.

இந்த சூழலில் கலிபோர்னியாவில் அன்மோல் கைது செய்யப்பட்டு உள்ளார். தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் கொலை வழக்கில் அன்மோலுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version