மார்த்தாண்டம் தாணிமூடு இசக்கியம்மன் கோவிலில் கடந்த 18ஆம் தேதி பூஜைக்குப் பிறகு கோவில் ஆபரணங்கள் அறையில் பூட்டி வைக்கப்பட்டன. 27ஆம் தேதி மீண்டும் பூஜைக்காக பூசாரி சென்றபோது, அறைப் பூட்டு உடைக்கப்பட்டு, ஒரு கிலோ வெள்ளி முக கவசம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பூசாரி நாகப்பன் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
