குமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகத்தின் அருகே குளச்சல் போக்குவரத்து காவல் துறையால் அமைக்கப்பட்ட புதிய போக்குவரத்து சிக்னல் லைட், காற்றில் ஆடி ரோலிங் சிக்னல் போல் போக்குவரத்தை தடை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், உடனடியாக இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
