Home கன்னியாகுமரி செய்திகள் குமரி: புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தல்

குமரி: புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தல்

0

கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) கட்சியின் செயலாளர் எஸ். எம். அந்தோணி முத்து என்பவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: – கிறிஸ்தவர்கள் தங்களின் பண்டிகையில் புனிதமான நாளாக புனித வெள்ளிக்கிழமையை கடைபிடிக்கின்றனர். தமிழகத்தில் பல சூழ்நிலைகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்படுகின்றன. இதில் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளிக்கிழமையன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். எனவே அன்றைய தினம் மதுக்கடைகளை மூடினால் அமைதியான புனித வெள்ளிக்கிழமையால் கிறிஸ்தவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version