நேற்று முன்தினம் வாணியக்குடி கடற்கரைக்கு சென்று திரும்பிய ஷானு (34) என்பவர், அப்பகுதியில் உள்ள 15 வயது சிறுமியை செல்போனில் தவறான முறையில் படம்பிடிக்க முயன்றார். மாணவி சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் துரத்த முயன்றபோது ஷானு செல்போனை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஷானு மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
