Home கன்னியாகுமரி செய்திகள் குளச்சல்: காரால் மோதி பெண் கொலை முயற்சி – கைது

குளச்சல்: காரால் மோதி பெண் கொலை முயற்சி – கைது

0

குளச்சல் பகுதியைச் சேர்ந்த சுபசந்தியா (38) என்பவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த டிரைவர் சிம்சன் ராஜ் (55) என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கி திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக இரணியல் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் சுபசந்தியா பைக்கில் சென்றபோது, சிம்சன் ராஜ் காரால் மோதி அவரை படுகாயப்படுத்தியுள்ளார். குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் சுபசந்தியா அளித்த புகாரின் பேரில், குளச்சல் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிம்சன் ராஜை கைது செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version