Home கன்னியாகுமரி செய்திகள் குளச்சல்: மீனவர் வீட்டில் இரவில் பயங்கர தீ விபத்து

குளச்சல்: மீனவர் வீட்டில் இரவில் பயங்கர தீ விபத்து

0

கோடிமுனை பகுதியை சேர்ந்த ஆன்டனி என்பவரின் மனைவி, நேற்று மாலை கிரைண்டரில் மாவு அரைத்த பிறகு அதை நிறுத்தாமல் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சமையலறையில் தீப்பிடித்து எரிந்ததால், அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தினர். குளச்சல் போலீசார் நடத்திய விசாரணையில், கிரைண்டரை நிறுத்தாமல் சென்றதால் ஏற்பட்ட மின்கசிப்பே தீ விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version