Home சினிமா செய்திகள் புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் – வைரலாகும் புகைப்படம்

புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் – வைரலாகும் புகைப்படம்

0

நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார். அவருடன் சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், அபிராமி என பலர் நடித்துள்ளனர். ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு ஏஐ தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்ள இருக்கும் அவர், அடுத்து, சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் கமல்ஹாசனின் புதிய தோற்றத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. புதிய படத்துக்கான அவரது தோற்றம் இது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version