Home சினிமா செய்திகள் ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ ரிலீஸ் தேதி – படக்குழு முடிவு

ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ ரிலீஸ் தேதி – படக்குழு முடிவு

0

ஜெயம் ரவி நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு முடிவு செய்துள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள ‘பிரதர்’ படம் பெரும் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்தப் படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவருக்குமே நஷ்டம் ஏற்படும் என்று வர்த்தக நிபுணர்கள் கருதுகிறார்கள். இதனிடையே, தனது அடுத்த பட வெளியீட்டுக்கு தயாராகிவிட்டார் ஜெயம் ரவி.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை டிசம்பர் 20-ம் தேதி வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருக்கிறது. விரைவில் இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன. முழுக்க காதலை மையப்படுத்தி வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version