Home விளையாட்டு செய்திகள் டிஎன்பிபிஎல் சீசன் 2 அறிமுகம்

டிஎன்பிபிஎல் சீசன் 2 அறிமுகம்

0

தமிழ்​நாடு பிக்​கிள்​பால் பிரீமியர் லீக் (டிஎன்​பிபிஎல்) சீசன் 2 அறி​முக நிகழ்ச்சி நேற்று சென்னை கிண்​டி​யில் நடை​பெற்றது.

நிகழ்ச்​சி​யில் லீக்​கின் இயக்​குநர் யோகேஷ், தமிழ்​நாடு பிக்ளிள்பால் சங்​கத்​தின் தலை​வர் மோஹித் குமார், செய​லா​ளர் காவ்யா சோமேஷ் மற்​றும் அணி​களின் உரிமை​யாளர்​களான நடிகர் விக்​ரம் (கடலூர் அணி), நடிகைகள் வரலட்​சுமி (சென்னை அணி), கீர்த்தி பாண்​டியன் (நெல்லை அணி) உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

இந்​தத் தொடரில் சென்னை தமிழ் டைட்​டன்​ஸ், கோயம்​பத்​தூர் ஸ்மாஷர்​ஸ், கடலூர் கிங்​ஸ், காஞ்சி பிளாக்​பக்​ஸ், கொடை டைகர்​ஸ், மதுரை ஆல் ஸ்டார்​ஸ், நெல்லை சூப்​பர் ஸ்டார்​ஸ், ஊட்டி பைசன்​ஸ், ராம்​நாடு ராயல்​ஸ், ராக்​போர்ட் திருச்​சி, சேலம் சூப்​பர் ஸ்மாஷர்​ஸ், டிவின் ஈகிள்ஸ் ஒசூர் ஆகிய 12 அணி​கள் கலந்து கொள்​கின்​றன.

தொடரில் கலந்து கொள்​ளும் ஒவ்​வொரு அணி​யும் தலா 14 வீரர்​களை ஏலத்​தின் வாயி​லாக எடுப்​பார்​கள். இதற்​காக ஒவ்​வொரு அணி​யும் ரூ.36 லட்​சம் வரை செல​விடலாம் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. டிஎன்​பிபிஎல் சீசன் 2 வரும் செப்​டம்​பர் 17 முதல் 20 வரை சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள எக்​ஸ்​பிரஸ் அவென்யூ மாலின் நடு​வில் அமைந்​துள்ள பிரம்மாண்டமான திறந்தவெளி மையப் பகுதியில் நடைபெற உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version