Home மாநில செய்திகள் ஆய்வின்போது நேர்மை அவசியம்: தொழிலக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அமைச்சர் முகமது பர்வேஸ் அறிவுரை

ஆய்வின்போது நேர்மை அவசியம்: தொழிலக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அமைச்சர் முகமது பர்வேஸ் அறிவுரை

0

தொழிலக பாது​காப்பு மற்​றும் சுகா​தார இயக்கக அலு​வலர்​களின் திற​னாய்​வுக் கூட்​டம், தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் முகமது பர்​வேஸ் தலை​மை​யில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில், அமைச்​சர் முகமது பர்​வேஸ் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் உள்ள 55,214 தொழிற்​சாலைகளில் 27.72 லட்​சம் தொழிலா​ளர்​கள் பணிபுரி​கின்​றனர். மேலும், 3,611 கட்​டு​மானப் பணி​யிடங்​களில் சுமார் 5 லட்​சம் பேர் பணி​யாற்​றுகின்​றனர்.

தொழிற்​சாலைகள் மற்​றும் கட்​டு​மான பணி​யிடங்​களில் பணிபுரியக் கூடிய ஒவ்​வொரு தொழிலா​ளரின் பாது​காப்​பு, உடல்​நலன் மற்​றும் நலவச​தி​களில் சிறப்பு கவனம் செலுத்​தப்​படு​வதை அலு​வலர்​கள் தங்​களின் ஆய்​வின் போது உறுதி செய்ய வேண்​டும்.

அனைத்து அலு​வலர்​களும் நேர்மையாகவும், வெளிப்​படைத் தன்​மை​யுடன் எவ்​வித புகாருக்கு இடமளிக்​காத வகை​யில் ஆய்​வு​கள் மேற்​கொள்ள வேண்​டும். இத்​துறை​யில் அனைத்து சேவை​களும் இணை​ய​வழி வாயி​லாக மட்​டுமே வழங்​கப்பட வேண்​டும்.

21 குழுக்​கள் அமைப்பு

அமோனியா பயன்​படுத்​தும் தொழிற்​சாலைகளில் அபாயகர​மான சூழ்​நிலையை அகற்றி விபத்​துக்​களை தவிர்க்​கும் பொருட்​டு, 21 குழுக்​கள் அமைத்து சிறப்​பாய்​வு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

90 தொழிற்​சாலைகளில் ஆய்​வு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டு, 28 தொழிற்​சாலைகளில் தொழிலா​ளர்​கள் தங்​குமிடங்​கள் தொழிற்​சாலை வளாகத்​திற்​குள்​ளே​யும், அமோனியா பாதிப்​பிற்​குள்​ளாகக் கூடிய வகை​யில் அரு​கில் அமைந்​துள்​ள​தால் அவற்றை பாது​காப்​பான இடங்​களுக்கு மாற்​றம் செய்ய ஆணை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அமைச்​சர் பேசி​னார்.

ஆய்​வுக் கூட்​டத்​தில், தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்​டுத்​துறை செயலர் கொ. வீர ராகவ ராவ், தொழிலக பாது​காப்பு மற்​றும் சுகா​தார இயக்​குநர் செ. ஆனந்த் மற்​றும் அரசு உயர்​ அதி​காரி​கள்​ பங்​கேற்​றனர்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version