குமரி மாவட்ட கலெக்டர் பங்களாவில் சமையல்காரராக பணிபுரியும் பாபுராஜ், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ வினோத்குமார் என்பவரால் தாக்கப்பட்டார். நேற்று பாபுராஜ் பணிக்குச் செல்லும்போது, ஸ்ரீ வினோத்குமார் அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். தடுக்க வந்த பாபுராஜின் தந்தை ரவியையும் அவர் தாக்கியுள்ளார். காயமடைந்த இருவரும் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக ஸ்ரீ வினோத்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
