மலை உச்சியில் உள்ள தீபத் தூணில்தான் முந்தைய காலத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆகம விதி என இடைப்பட்ட காலத்தில்தான் உச்சிப்பிள்ளையார் கோயில் முன் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது என திருப்பரங்குன்றம் கோயில் முதல் ஸ்தானிகர் சுவாமிநாதன் பட்டர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம்மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் மன்னிப்பு கோரினார். கோயில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படியும், ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையிலும் வழக்கமான இடமான உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதாக ஆட்சியர் கூறியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கோயில் ஸ்தானிக பட்டர்கள் சுவாமிநாதன், பாலசுப்பிரமணியன், சொக்கு சுப்பிரமணியன், சண்முக சுந்தரம் ஆகியோர் நவ.24-ம் தேதி கோயில் துணை ஆணையர், அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்களுக்கு கடிதம் அனுப்பினர். அதில், ‘அறங்காவலர்கள் குழு தீர்மானத்தின்படி உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது என அறிவிப்பு வெளியிட்டதை அறிந்தோம்.
ஆனால், அந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நாங்கள் எந்த ஒரு கடிதமும் கோயில் நிர்வாகத்துக்கு வழங்கவில்லை. உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக 2025-ம் ஆண்டுதான் கடிதம் அளித்துள்ளோம். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கருத்தும் கூறவில்லை’ என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் முதல் ஸ்தானிகர் சுவாமிநாதன் பட்டர் நேற்று கூறும்போது, “மலை உச்சியில் உள்ள தீபத் தூணில்தான் முந்தைய காலத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆகம விதி என இடைப்பட்ட காலத்தில்தான் உச்சிப்பிள்ளையார் கோயில் முன் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. அதற்கு முன்புவரை அந்த இடத்தில் தீபம் ஏற்றியதில்லை. மலை உச்சியில்தான் தீபம் ஏற்றப்பட்டது.
மலை உச்சியிலுள்ள தீபத் தூணுக்கு செல்லும் பாதையை முறைப்படுத்தி, படிகள் கட்டிக் கொடுத்து, மின் விளக்குகள் வசதி செய்து கொடுத்தால் நிச்சயம் தீபம் ஏற்றப்படும்” என்றார்.
1996-ம் ஆண்டு முதல்
ஸ்தானிக பட்டர்கள் சுவாமிநாதன், பாலசுப்பிரமணியன், சொக்குசுப்பிரமணியன், சண்முக சுந்தரம் ஆகிய 4 பேரும் கோயில் அதிகாரிகளிடம் நேற்று ஒரு கடிதம் அளித்துள்ளனர். அதில், ‘1996-ம் ஆண்டு முதல் உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில், கோயில் வழிகாட்டுதலின் படியும், சைவ சமய நெறிமுறைகளின் படியும் கார்த்திகை தீபம் ஏற்றி வருகிறோம்.
இந்த கருத்துரையை எழுத்துப்பூர்வமாக 7-11-2013-ம் தேதியும், 4-12-2025-ம் தேதியும் வழங்கியுள்ளோம். ஒவ்வொரு வருடமும், எங்களின் கருத்துகளை வாய்மொழியாகவோ, தேவைப்பட்டால் எழுத்து மூலமாகவோ
