Home சினிமா செய்திகள் “போலீஸ் கேரக்​டர் பண்​ணவே முடியாதுன்னு நினைச்​சேன்” – சசிகுமார் நேர்காணல்

“போலீஸ் கேரக்​டர் பண்​ணவே முடியாதுன்னு நினைச்​சேன்” – சசிகுமார் நேர்காணல்

0

சசிகுமார் நடித்திருக்கும் குற்றப்புலனாய்வு த்ரில்லர் வெப் சீரிஸ் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’. ஆக.7-ல் பிரைம் வீடியோவில் வெளியாகும் இதில் மூஸா ராசா என்ற கதாபாத்திரத்தில் போலீஸாக நடித்திருக்கிறார் அவர்.

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி இருக்கும் இதில் யஷ்வந்த், அனகா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடருக்கு சைமன் கிங் இசை அமைத்திருக்கிறார். இத்தொடர் பற்றி சசிகுமாரிடம் பேசினோம்.

உங்களோட முந்தைய சில படங்கள்ல ரவுடியா நடிச்சிருக்கீங்க… இதுல போலீஸா மாறியிருக்கீங்க?

அது​தான் சினிமா. ஒரு நடிகனா இருக்​கிறதாலதான் இதெல்லாம் சாத்தியமாகுது. எந்த கேரக்டராகவும் மாறும் வாய்ப்பு இதுல மட்டும்தான் கிடைக்​கும். முதல்ல மதுரை ரவுடி கதைகளா வந்தது. அப்ப அதை பண்​ணினேன். இப்ப போலீஸ் கதை வந்திருக்​கு. அடுத்து வழக்கறிஞராகவும் பண்ணலாம். நீதிபதியாகவும் பண்ணலாம். இந்த வெப் சீரிஸ் கதையை இயக்குநர் சொல்லும்​போது, எனக்கு பிடிச்சிருந்​தது.

ஒரு நிரபரா​தியை காப்​பாற்ற ஒரு போலீஸ் போராடுற கதை​தான் இந்த தொடர். பார்வையாளர்கள் போலீஸ் பக்கம் நிற்​கிற மாதிரியான கதை. இதுல வர்ற ‘தி மிஸ்​டரி ஆஃப் மணி’ கேரக்டருக்​குத்​தான் என்னை இயக்​குநர் கூப்​பிடப் போறார்ன்னு நினைச்​சேன். ஆனா, அவர் போலீஸ் கேரக்​டர் பண்​றீங்​கன்னு சொன்​னார். இது​வரை ஒரு 30 படங்​கள் பண்​ணிட்​டேன்; யாருமே என்னை போலீஸா யோசிக்​கலை. ரவுடி​யா​தான் பார்ப்​பாங்​கன்னு இயக்​குநர் ​கிட்ட சொன்​னேன். ஆனா, நீங்​க​தான் போலீஸ் கேரக்டர் பண்ணணும்னு அவர் உறு​தியா நின்​னார்.

போலீஸ் யூனி​பார்ம்ல இதுல​தான் முதன்​முதலா நடிக்கிறீங்க…

ஆமா. ஏற்​கெனவே ‘என்னை நோக்​கிக் பாயும் தோட்​டா’ல நடிச்​சிருந்​தா​லும் அதுல யூனி​பார்ம் கிடை​யாது. இந்த வெப் தொடர்ல யூனிஃ​பார்​மோட நடிக்​கும் போது, நமக்​குள்​ளயே அந்த கம்​பீரம் வந்து உட்​கார்ந்​திருது. அது ஒரு தனி ஃபீலிங்​தான். போலீஸ்னா ஆக் ஷன் இல்​லாம இருக்​காது. ஆனா, எந்த மிகைப்​படுத்​தலும் இல்​லாம, யதார்த்​தமா அந்த ஆக் ஷன் இருக்​கும். அதாவது அது ஒரு சூப்​பர் ஹீரோவா இருக்​காது, ஒரு ஹீரோவா இருக்​கும்​.

ரெண்​டுக்​கும் வித்​தி​யாசம் இருக்​கு. கதை​யில தாடி வச்​சிருக்​கிற போலீஸா வர்​றேன். அது ஏன் அப்​படிங்​கறதுக்கு காரணம் இருக்​கு. அது நல்​லா​யிருக்​கும். இந்த கதா​பாத்​திரத்​துக்கு இன்ஸ்பிரேஷனா சிலரை நான் நினைச்​சிருந்​தேன். ஆனா, இயக்​குநர் ஆண்ட்ரூ அதை அப்​படியே ஓரமா வச்​சுட்​டு, அவரோட மைண்டல இருக்​கிற போலீஸா என்னை நடிக்க வச்​சிருக்​கார். அவர் என்ன சொன்​னாரோ, அதை பண்​ணி​யிருக்​கேன். ‘வதந்தி சீசன் 1 தொடருக்​கும் இதுக்​கும் தொடர்பு இல்​லை. இது​வும் புது​மையா இருக்​கும்.

த்ரில்​லர் கதைகள் நிறைய வந்​திருக்​கு… இதுல என்ன ஸ்பெஷல்?

நிறைய வந்​திருக்​கலாம். இது​வரை வெளி​யான இது​போன்ற ஜானர் கதைகள்ல குற்​ற​வாளி​களை கண்​டு​பிடிச்​சிட​ணும்ங்கற பரபரப்​பு​தான் இருக்​கும். இந்த வெப்​தொடர்​ல, ஹீரோ பாவம். போலீஸ் எப்​படி​யா​வது குற்​ற​வாளியை கண்​டு​பிடிச்​சு, இவனை ரிலீஸ் பண்​ணணும்ங்கற பரபரப்பு இருக்​கும். அதுக்​கான திரைக்​கதையை இயக்​குநர் ஆண்ட்​ரூஸ் அரு​மையா அமைச்​சிருக்​கார்.

காலைல ஆரம்​பிச்​சு, நைட் வரை போலீஸ் கேரக்​டர்ல நடிச்​சு, போலீ​ஸாவே மாறிட்​டேன். வீட்​டுல​யும் கூட அதே தோரணை​யில இருந்​தேன்.

எல்லா ஹீரோக்​களுக்​கும் போலீஸ் கேரக்​டர் மேல ஒரு காதல் இருக்​கும். அதை பல ஹீரோக்​களே சொல்​லி​யிருக்​காங்க. உங்களுக்கு இந்த வெப் தொடரோட மூஸா ராசா கேரக்​டர் அப்படி இருந்​த​தா?

கண்​டிப்​பா. ஆனா, நான் போலீஸ் கேரக்​டர் பண்​ணவே முடி​யாதுன்னு நினைச்​சேன். எனக்கு இதுக்கு முன்​னால அப்​படி வாய்ப்பே வரலை. ஒவ்​வொரு ஹீரோவுக்​கும் போலீஸ்​ படம் ஒரு மைல்​கல்லா இருக்​கும். அது மறக்க முடி​யாத படமாக​வும் இருந்திருக்​கு.

எல்லா ஹீரோவுக்​குமே காக்கி உடுப்பு போட்டா அது ஹிட்​டுனு சொல்​வாங்க. போலீஸ் கதைகள் எல்​லாம் அப்​படித்​தான் அமைஞ்​சிருக்​கு. அந்த வரிசை​யில எனக்கு இந்த வெப் தொடர் இருக்​கும்னு நம்​பறேன். இதுக்​குப் பிறகு எனக்கு நிறைய போலீஸ் கதைகள் வரும்னு நினைக்​கிறேன்.

நீங்க படம் இயக்கி ரொம்ப வருஷ​மாச்​சே…

ஆமா. நீங்​களும் வருஷா வருஷம் கேக்​கறீங்க; நானும் அடுத்த வருஷம் அடுத்த வருஷம்னு சொல்​லிட்டே இருந்​தேன். அந்த அடுத்த வருஷம் எப்ப வரும்னு கேட்​பீங்க. சீக்​கிரமா இயக்​கப் போறேன். வேல ராமமூர்த்தி​யோட ‘குற்​றப்​பரம்​பரை’ கதையை ஹாட் ஸ்டாருக்கு வெப் சீரிஸா பண்​றேன். ரத்​னகு​மார் எழுதி இயக்​குநர் பார​தி​ராஜா பண்ண வேண்​டிய ‘குற்​றப்​பரம்பரை’ கதையை சினி​மா​வா பண்ணப்​ போறேன்​. இந்​த ரெண்​டும்​ அடு​த்​தடு​த்​து இருக்கு.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version