கவுரவ தோற்றத்தில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தனது இயக்குநர் மற்றும் நடிகர்கள் நண்பர்களின் பல்வேறு படங்களில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி. தற்போது அதனை நிறுத்திவிட்டதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
அப்பேட்டியில் விஜய் சேதுபதி, “கவுரவ தோற்றத்தில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டேன். ரஜினி சார் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ படம் மட்டுமே இதில் விதிவிலக்கு. ஏனென்றால் அப்படத்தின் போஸ்டரில் எனது முகம் இடம்பெற்றாலும், அனைவரும் ரஜினி சாரை மட்டுமே கவனிப்பார்கள்.
ஆனால், சிறிய பட்ஜெட் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதால் அதனை போஸ்டராக்கி விளம்பரப்படுத்துகிறார்கள். இதனால் நான் நாயகனாக நடிக்கும் படங்கள் பாதிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.
