Home கன்னியாகுமரி செய்திகள் மார்த்தாண்டத்தில் அரசு பேருந்து மோதி கணவன் மனைவி படுகாயம்

மார்த்தாண்டத்தில் அரசு பேருந்து மோதி கணவன் மனைவி படுகாயம்

0

திருவனந்தபுரம் அமரவிளை குற்றி வேலி விளையை சேர்ந்தவர் குட்டப்பன்(53) , அவரது மனைவி ராஜம்(52) , ஆகிய இருவரும் கூட்டப்பனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் மார்த்தாண்டத்தில் இருந்து வெட்டுமணி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது குழித்துறை அரசு மருத்துவமனை அருகாமையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு பேருந்து அதி வேகமாகவும் அஜாகிரதியாகவும் சென்று குட்டப்பனின் இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதி உள்ளது. இதில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்துடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version