Home சினிமா செய்திகள் ‘மூக்குத்தி அம்மன் 2: மகா சக்தி’ டீசர் எப்படி? – தெய்வீகமும் பிரம்மாண்டமும்!

‘மூக்குத்தி அம்மன் 2: மகா சக்தி’ டீசர் எப்படி? – தெய்வீகமும் பிரம்மாண்டமும்!

0

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவகிவரும் ‘மூக்குத்தி அம்மன் 2: மகா சக்தி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம், வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

டீசரின் தொடக்கத்திலேயே ஆபத்தில் இருக்கும் அரச குடும்பத்துக் குழந்தை, அதை அழிக்கத் துடிக்கும் தீய சக்திகள் மற்றும் தீரத்துடன் போராடும் மனிதர்கள் என ஒரு புராணக் கதையின் உணர்வைச் சுந்தர்.சி காட்சிப்படுத்தியுள்ளார்.

விஷுவல் எஃபெக்ட்ஸ், பிரம்மாண்ட அரங்க அமைப்புகள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் படத்துக்கு பெரிய பலமாக இருக்கும் என்பதை டீசர் உணர்த்துகிறது. முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இரண்டாம் பாகம் பிரம்மாண்டமான களத்திற்கு மாறியிருப்பதை டீசர் காட்டுகிறது.

நயன்தாராவின் கம்பீரமான என்ட்ரி டீசருக்கு சிறப்புச் சேர்ப்பதாக அமைந்திருக்கிறது. மூக்குத்தி அம்மன் அவதாரத்தில் கையில் குழந்தையுடன் அவர் தோன்றும் காட்சிகள், முதல் பாகத்தைக் காட்டிலும் இதில் அம்மன் கதாபாத்திரம் அதிக ஆக்‌ஷன் மற்றும் சீரியஸ் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை உயர்த்துகிறது. 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version