Home சினிமா செய்திகள் ‘அப்பா குட்டி’ ட்ரெய்லர் எப்படி? – மகளுக்காக வாழத் துடிக்கும் தந்தை!

‘அப்பா குட்டி’ ட்ரெய்லர் எப்படி? – மகளுக்காக வாழத் துடிக்கும் தந்தை!

0

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘அப்பா குட்டி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

அப்பா குட்டி படத்தின் ட்ரெய்லரை விஜய் ஆண்டனி அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘‘அப்பா குட்டி படத்தின் சிறு காட்சி. குடும்பங்களுக்கான திரைப்படம்’ என்று தெரிவித்துள்ளார்.

2.50 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லர் தாயில்லாத ஒரு மகளுக்கும் அப்பாவுக்குமான பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் காட்சிகளுடன் தொடங்கி தொடர்கிறது. மகளின் பள்ளி ஆசிரியைக்கு அம்மா இல்லாமல் வளரும் அந்தக் குழந்தை மீதும், அவளின் அப்பா மீதும் அன்பு வருவதாய் காட்சிகள் விரிகிறது.

சரிதான் அடுத்து ஒரு சிங்கிள் பேரண்ட் லவ்-வா என மனம் யோசித்து முடிக்கும் நொடியை உடைத்துப் போடுகிறது இடையிடையில் வரும் அதிரடி சண்டைக் காட்சிகளும், அந்தக் குழந்தையின் அம்மா பற்றிய பின் கதையும்.

இந்த சஸ்பென்ஸுக்கு இடையில் அந்த அப்பாவும் மகளும் நீதிமன்ற கூண்டுக்குள் நிற்க, தன் மகளின் வாழ்க்கைக்காக போராடும் அப்பாவின் உணர்வுப்பூர்வமான கதை என்கிற வழக்கமான ப்ளாட்-ஐ எப்படி வித்தியாசமாக காட்டி இருக்கப் போகிறார்கள் என படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது ட்ரெய்லர்.

விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘அப்பா குட்டி’ படத்தை மு.மாறன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் பிரீத்தி அஸ்​ராணி, பேபி லிதன்​யா, பகவதி பெரு​மாள், ஹரிப்​பிரி​யா, அருவி மதன், சித்ரா லட்​சுமணன் உள்​ளிட்ட பலர் முக்​கியக் கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். இப்​படத்​துக்கு ராஜீவ் ரவீந்​திரன் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். படம்  நவம்பர் 20 அன்று வெளியாக இருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version