Home சினிமா செய்திகள் ‘கேம் சேஞ்சர்’ ட்ரெய்லர் எப்படி? – மீண்டும் கம்பேக் தருவாரா ஷங்கர்!

‘கேம் சேஞ்சர்’ ட்ரெய்லர் எப்படி? – மீண்டும் கம்பேக் தருவாரா ஷங்கர்!

0

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், திரு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? – ‘இந்தியன் 2’ பெற்ற மோசமான வரவேற்புக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம். ‘இந்தியன் 2’ படம் உருவாகிக் கொண்டிருந்த போதே இந்த படத்திலும் ஷங்கர் கவனம் செலுத்தி வந்தார். ‘முதல்வன்’, ‘சிவாஜி’-க்கு பிறகு ஷங்கரின் அக்மார்க் பாணியிலான சமூகம் + அரசியல் கருத்துகளைக் கொண்ட முழுமையான படமாக ‘கேம் சேஞ்சர்’ இருக்கும் என்பதை ட்ரெய்லரிலேயே உணர முடிகிறது.

மேலும் ட்ரெய்லரின் பல இடங்களில் ‘முதல்வன்’, ‘சிவாஜி’ டைப் காட்சிகளையும் காணமுடிகிறது. ஹீரோ ராம்சரணை தாண்டி எஸ்.ஜே.சூர்யா தனது வில்லத்தனத்தால் வழக்கம் போல ஸ்கோர் செய்வார் என்று தோன்றுகிறது. ஷங்கரின் திரை பிரம்மாண்டத்துக்கு தமனால் ஈடுகொடுக்க முடியுமா என்பதை படம் வந்த பிறகு தான் தெரிந்து கொள்ள முடியும். ட்ரெய்லரில் பின்னணி இசை பெரிதாக ஈர்க்கவில்லை. திருவின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. ஷங்கர் படங்களின் பலமே அவற்றின் திரைக்கதை தான். ஆனால் சமீபத்தில் வெளியான இந்தியன் 2-வில் அது மிஸ் ஆனதே கடும் விமர்சனங்களுக்கு முக்கிய காரணம். இந்த படத்தில் அந்த குறைகளை களைந்து மிகப்பெரிய கம்பேக்கை ஷங்கர் கொடுப்பார் என்று நம்பலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version