Home தேசிய செய்திகள் அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

0

கடந்த 2008ம் ஆண்டு அகம​தா​பாத் குண்​டு​வெடிப்பு வழக்​கில் 38 பேரின் மரண தண்​டனையை குஜ​ராத் உயர் நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ளது.

கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி குஜ​ராத் மாநிலம், அகமதா​பாத்​தில் ஹட்​கேஷ்வர் உள்​ளிட்ட 21 இடங்​களில் வெடிகுண்​டு​கள் வெடித்​தன. இதில் 56 பேர் கொல்​லப்​பட்​டனர். 246-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்த தாக்​குதலுக்கு ஹர்​கத் உல் ஹிகாத் அல் இஸ்​லாமி என்ற தீவிர​வாத அமைப்பு பொறுப்​பேற்​றது.

இந்த வழக்கை அகம​தா​பாத் சிறப்பு நீதி​மன்​றம் விசா​ரித்​தது. மொத்​தம் 35 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டு, 78 தீவிர​வா​தி​கள் கைது செய்​யப்​பட்​டனர். 548 குற்​றப் பத்​திரி​கைகள் தாக்​கல் செய்யப்​பட்​டன. 6,000 ஆதா​ரங்​கள் சமர்ப்​பிக்​கப்​பட்​டன. 1,163 சாட்​சிகள் விசா​ரிக்​கப்​பட்​டனர். கடந்த 2022ம் ஆண்டு பிப்​ர​வரி 8ம் தேதி அகம​தா​பாத் சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்பு வழங்​கியது. அப்போது 49 பேர் குற்​ற​வாளி​களாக அறிவிக்​கப்​பட்​டனர். 29 பேர் விடுவிக்​கப்​பட்​டனர். குற்​ற​வாளி​களாக தீர்ப்​பளிக்​கப்​பட்ட 49 பேரில் 38 பேருக்கு மரண தண்​டனை​யும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை​யும் விதிக்​கப்​பட்​டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து குஜ​ராத் உயர் நீதி​மன்​றத்​தில் மேல்முறையீடு செய்​யப்​பட்​டது. நீதிப​தி​கள் கோக்​ஜே, சமீர் ஜேடேவ் ஆகியோர் அடங்​கிய அமர்வு மேல்​முறை​யீட்டு வழக்கை விசா​ரித்து நேற்று தீர்ப்பு வழங்​கியது. அப்​போது அகம​தா​பாத் சிறப்பு நீதி​மன்ற தீர்ப்பை உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் உறுதி செய்தனர். 38 மரண தண்​டனை குற்​ற​வாளி​கள், 11 ஆயுள் தண்டனை குற்​ற​வாளி​களின் மேல்​முறை​யீட்டு மனுக்​கள் தள்ளுபடி செய்யப்பட்​டன.

தீர்ப்​பில் நீதிப​தி​கள் கூறும்​போது, “அகம​தா​பாத் குண்டு வெடிப்பில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்​பீடு வழங்க வேண்​டும். படு​கா​யம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்​சம், லேசான காயம் அடைந்தவர்​களுக்கு தலா ரூ.1 லட்​சமும் இழப்​பீடு அளிக்​கப்பட வேண்​டும். இந்த இழப்​பீடு தொகைகளை வரும் 2027ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்​குள் குஜ​ராத் அரசு வழங்க வேண்​டும்” என்று உத்தர​விட்டு உள்​ளனர்.

இதுகுறித்து அரசு தரப்பு வழக்​கறிஞர் அமித் படேல் கூறும்​போது, “அகம​தா​பாத் சிறப்பு நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்பை எதிர்த்து அனைத்து குற்​ற​வாளி​களும் உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தனர். இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் நாள்தோறும் விசா​ரிக்​கப்​பட்​டது. இதன்​காரண​மாகவே விரை​வாக தீர்ப்பு வழங்​கப்​பட்டு இருக்​கிறது. அதோடு குண்​டு​ வெடிப்​பால் பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு இழப்​பீடு வழங்​க​வும் உயர் நீதிமன்​றம் உத்​தர​விட்​டிருக்​கிறது” என்​றார்.

குண்​டு ​வெடிப்பு வழக்கை விசா​ரித்த அப்​போதைய காவல் துறை மூத்த அதி​காரி பி.ஜி.வகேலா கூறும்​போது, “கடந்த 2008ம் ஆண்டு குண்​டு​ வெடிப்​பின் ​போது ஒட்​டுமொத்த நாடும் அதிர்ச்​சி​யில் உறைந்​தது. இந்த வழக்கை நாங்​கள் விசா​ரித்​த​போது 3 மாதங்​கள் வீட்​டுக்கே செல்​ல​வில்​லை. முதலில் 90 பேரை பிடித்​தோம். அவர்களில் 82 பேரை கைது செய்​தோம். பின்​னர் 78 பேர் மீது வழக்​கு​களை பதிவு செய்​தோம்.

போதிய ஆதா​ரங்​கள் இல்​லாத​தால் 29 பேரை மட்​டும் சிறப்பு நீதிமன்​றம் விடு​தலை செய்​தது. மற்​றவர்​களுக்கு கடுமை​யான தண்​டனை விதிக்​கப்​பட்​டது. இந்​த தீர்​ப்​பை உயர்​ நீதி​மன்​ற​மும்​ உறுதி செய்​திருக்​கிறது. அகம​தாபாத்​ குற்​றப்பிரிவு போலீ​ஸாரின்​ தீவிர வி​சா​ரணை​யால்​ குற்​ற​வாளி​கள்​ தண்​டிக்​கப்​பட்​டு உள்​ளனர்​” என்​றார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version