Home தேசிய செய்திகள் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டை

0

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் மலைப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் டான்மார்க் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். எனினும், யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version