Home சினிமா செய்திகள் “பெண்களுக்கு அதிகம் மரியாதை கொடுங்கள்” – சூர்யா வேண்டுகோள்

“பெண்களுக்கு அதிகம் மரியாதை கொடுங்கள்” – சூர்யா வேண்டுகோள்

0

சூர்​யா, மமிதா பைஜு, ராதிகா சரத்​கு​மார், ரவீணா டாண்​டன், யோகி பாபு உள்பட பலர் நடித்​துள்ள படம் ‘விஸ்​வ​நாத் அண்ட் சன்​ஸ்’.

வெங்கி அட்​லூரி இயக்​கி​யுள்ள இப்​படத்தை சித்​தாரா என்​டர்​டெ​யின்​மென்ட்ஸ் தயாரித்​துள்​ளது. ஆக.14-ல் வெளி​யாக இருக்​கும் இப்​படத்​துக்கு ஜி.​வி.பிர​காஷ் குமார் இசை அமைத்​துள்​ளார். இதன் இசை வெளி​யீட்டு விழா கோயம்​புத்​தூரில் மாணவ, மாணவி​கள் முன்​னிலை​யில் நடை​பெற்​றது. விழா​வில் தயாரிப்​பாளர் சூர்​யதேவர நாக வம்​சி, வெங்கி அட்​லூரி, ஜிவி பிர​காஷ் குமார், சூர்​யா, மமிதா பைஜு, சுனில் ரெட்​டி, தயாரிப்​பாளர் ராஜசேகர் பாண்​டியன் என பலர் கலந்து கொண்​டனர்.

விழா​வில் சூர்யா பேசும்​போது, ‘‘செல்​போனுக்கு நாம் கொடுக்​கும் கவனத்தை குடும்​பத்​துக்​குக் கொடுப்​ப​தில்​லை. இதில் நானும் இருக்​கிறேன். செல்​போன் பயன்​பாட்டை நானும் குறைக்க வேண்​டும். செல்​போனில் வரும் மெமரிஸ் விடுங்​கள். யதார்த்​த​மான நினை​வு​களை உரு​வாக்​கிக் கொள்​ளுங்​கள். சிறு வயதில் கண்​ணா​மூச்சி என பல விளை​யாட்​டு​களை விளை​யாடி​யிருக்​கிறேன். இதெல்​லாம் சென்​னை​யில் கிடைக்​காது. மறக்க முடி​யாத அனுபவங்​கள்.

‘கருப்​பு’ படத்தை வெற்​றிப் படமாக்​கிய உங்​கள் அனை​வருக்​கும் நன்​றி. இந்​தப் படத்​தின் 100-வது நாள் அன்று உங்​களைச் சந்​திக்​கிறேன். ‘விஸ்​வ​நாத் அண்ட் சன்​ஸ்​’ படத்​துக்​காகத் தமிழில் டப்​பிங் பேசி​யிருக்​கிறார் மமி​தா.

எனக்கு இந்​தப் படம் புதிய அடை​யாளத்​தைக் கொடுக்​கும். அதைக் கொடுத்​தவர், இயக்​குநர் வெங்கி அட்​லூரி. இந்​தப் படத்​தில் 3 பெண்​களின் கதா​பாத்​திரங்​களைச் சிறப்​பாக எழு​தி​யிருக்​கிறார் இயக்​குநர். இந்​தப் படம் உறவு​கள் குறித்து அழகாகப் பேசும். படம் முழு​வதும் உங்​கள் உதடு​கள் அருகே சின்ன சிரிப்பு இருக்​கும்.

இந்​தப் படம் குடும்​பம், ரொமான்​ஸ், காமெடி என அனைத்​தும் கலந்த படமாக இருக்​கும். இது ரசிகர்​களுக்​கான படம். ரசிகர்​களின் குடும்​பங்​களுக்​கான திரைப்​படம். 28 வருடத்​துக்கு மேல் என்னை இங்கு நிற்க வைத்​திருக்​கிறீர்​கள்.

உங்​களுக்கு நன்​றி. நம்​பிக்கை இருந்​தால், வாழ்​வில் நீங்​கள் என்ன ஆசைப்​படு​கிறீர்​களோ அது உங்​களுக்​குக் கிடைக்​கும். தினம் தினம் காதலி​யுங்​கள். பெண்​களுக்கு மரி​யாதை கொடுங்​கள். வாழ்​வில் எல்​லாமே மாறும்.

ஆனால், அவர்​கள் மீது இருக்​கும் காதல் மாறவே கூடாது. திரு​மணத்​துக்​குப் பின் பெண்​கள் அனைத்​தை​யும் சமரசம் செய்கிறார்​கள். அவர்​களுக்​குக் காதலைவிட மரி​யாதையை அதி​கம் கொடுங்​கள்” என்​றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version