இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இந்திய மகளிர் அணி முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஹால் ஆஃப் ஃபேம் கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த கவுரவம் கங்குலி, அஞ்சும் சோப்ரா, கெவின் பீட்டர்சன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட ஐசிசி தலைவர் ஜெய் ஷா ‘ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம்’ அங்கீகாரம் பெறுபவர்களை பாராட்டினார்.
