Home தேசிய செய்திகள் 50,000 பெண் பட்டதாரிகளுக்கு இலவச ஸ்கூட்டர்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

50,000 பெண் பட்டதாரிகளுக்கு இலவச ஸ்கூட்டர்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

0

“​ராணி லட்​சுமி​பாய் ஸ்கூட்டி திட்​டத்​தின் கீழ், 2025-26 கல்​வி​யாண்​டில் இளங்​கலைப் பட்​டப்​படிப்பை முடித்த 50,000 பெண் பட்​ட​தா​ரி​களுக்​கு, அடுத்த மாதம் இலவச ஸ்கூட்​டர்​கள் வழங்​கப்​படும்” என்று உத்​தரப் பிரதேச முதல்​வர் யோகி ஆதித்யநாத் அறி​வித்​துள்​ளார்.

லக்​னோ​வில் நடை​பெற்ற கல்வி உதவித்​தொகை வழங்​கும் நிகழ்ச்​சி​யில் பேசிய முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், இதுகுறித்து கூறிய​தாவது: நடப்பு நிதி​யாண்​டில் 9, 10-ம் வகுப்பை சேர்ந்த 4.6 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​களின் வங்​கிக் கணக்​கு​களில் ரூ.148 கோடிக்​கும் அதி​க​மான கல்வி உதவித்​தொகை மற்​றும் கல்விக் கட்​ட​ணத் தொகை செலுத்​தப்​பட்​டுள்​ளது.

முன்பு 100 மாணவர்​களில் 60 முதல் 70 பேர் மட்​டுமே கல்வி உதவித்தொகை​ பெற்​றனர். எழுத்​தர்​கள் உள்​ளிட்ட சிலர் அந்​தப் பணத்தை முறை​கே​டாகப் பெற்​றதால் மாணவர்​கள் ஏமாற்றப்பட்டனர். முன்பு மாணவர்​கள் கல்வி உதவித் தொகை​யைப் பெறு​வதற்​காக செய்த பயணச் செல​வு, அவர்​கள் இறு​தி​யில் பெற்ற தொகை​யை​விட அதி​க​மாக இருந்​தது.

தற்​போது, ஒவ்​வொரு மாணவரின் கல்வி உதவித் தொகை​யும் நேரடி​யாக அவர்​களது வங்​கிக் கணக்​கில் சேரும் வகை​யில் அரசு நடவடிக்கை எடுத்​துள்​ளது. ஜேஇஇ, நீட் போன்ற தேர்​வு​களுக்​குத் தயா​ராவதற்​காக உத்​தர பிரதேச மாணவர்​கள் இனி பிற மாநிலங்​களுக்​குச் செல்ல வேண்​டிய அவசி​யம் இல்​லை.

தற்​போது முதல்​வர் அப்​யுதயா கோச்​சிங் திட்​டத்​தின் மூலம் இளைஞர்​கள் இதன் பயனைப் பெற்று வரு​கின்​றனர். ராணி லட்​சுமி​பாய் ஸ்கூட்டி திட்​டத்​தின் கீழ், 2025-26 கல்​வி​யாண்​டில் இளங்​கலைப் பட்​டப்​படிப்பை முடித்த 50,000 பெண் பட்​ட​தா​ரி​களுக்​கு, அடுத்த மாதம் இலவச ஸ்கூட்​டர்​கள் வழங்​கப்​படும். இவ்​வாறு முதல்​வர்​ ஆதித்​ய​நாத்​ கூறி​னார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version