Home தேசிய செய்திகள் டெல்லியில் ‘ஹோலி’க்கு இலவச காஸ் சிலிண்டர்

டெல்லியில் ‘ஹோலி’க்கு இலவச காஸ் சிலிண்டர்

0

வடமாநிலங்களில் பிரபலமான ஹோலி பண்டிகை வரும் மார்ச் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வரும் நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

இதுதொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “ஹோலி, தீபாவளி பண்டிகையின்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த திட்டம் நடப்பாண்டில் அமல்படுத்தப்படும்.

வரும் ஹோலி பண்டிகை மற்றும் தீபாவளியின்போது அங்கீகரிக்கப்பட்ட ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இலவசமாக சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும். அவர்களின் வங்கிக் கணக்குகளில் சமையல் காஸ் சிலிண்டருக்கான தொகை நேரடியாக டெபாசிட் செய்யப்படும். குழாய் மூலம் (பிஎன்ஜி) சமையல் காஸ் எரிவாயு இணைப்பு வைத்திருப்போரின் வங்கிக் கணக்குகளிலும் ரூ.853 டெபாசிட் செய்யப்படும்” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version