Home மாநில செய்திகள் கல்பாக்கம் அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் உயிரிழப்பு

கல்பாக்கம் அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் உயிரிழப்பு

0

கல்பாக்கம் அடுத்த சின்னகுப்பம் பகுதியில் மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்த விபத்தில், மீனவர் கடலில் முழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் சின்னகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மீனவர் லட்சுமணன். இவர், தனக்கு சொந்தமான பைபர் படகில் தீனா மற்றும் விக்னேஷ்(27) ஆகியோருடன் இன்று அதிகாலையில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது, கடற்கரையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் பைபர் படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், படகிலிருந்த தீனா, லட்சுமணன் ஆகிய இருவரும் உயிர் தப்பினர். மீனவர் விக்னேஷ் கவிழ்ந்த படகில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கிகொண்டு கடலில் முழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரது உடலை உடன் சென்ற தீனா மற்றும் லட்சுமணன் ஆகியோர் கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.

இதனிடையே, விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கூவத்தூர் போலீஸார், இறந்த மீனவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் மீன்பிடிக்க சென்று, கரையின் அருகிலேயே படகு கவிழ்ந்து மீனவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version