Home விளையாட்டு செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 3 பதக்கம் வென்ற தடகள வீராங்கனை, பயிற்சியாளருக்கு பாராட்டு விழா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 3 பதக்கம் வென்ற தடகள வீராங்கனை, பயிற்சியாளருக்கு பாராட்டு விழா

0

 ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் 3 பதக்​கங்​களை வென்ற தடகள வீராங்​கனை வித்யா ராம்​ராஜ், அவரது பயிற்சியாளர் நேஹ்​பால் சிங் ஆகியோ​ருக்கு வேலம்​மாள் நெக்ஸஸ் சார்​பில் பாராட்டு விழா நடை​பெற்​றது.

ஆவடி வேலம்​மாள் வித்​யாலயா வளாகத்​தில் நடை​பெற்ற விழாவுக்கு வேலம்​மாள் நெக்​ஸஸ் நிறு​வனத்​தின் தாளாளர் எம்விஎம் வேல்​மோகன் தலைமை வகித்​து, வித்யா ராம்​ராஜ், நேஹ்​பால் சிங்கை கவுர​வித்​தார். இரு​வருக்​கும் வேலம்​மாள் நெக்ஸஸ் சார்​பில் கார் பரி​சாக வழங்​கி​னார்.

விழா​வில் தாளாளர் வேல்​மோகன் பேசுகை​யில், “சர்​வ​தேச அளவில் இந்​தி​யா​வுக்கு பெருமை சேர்த்த இவர்​களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்​றும் விளை​யாட்​டுத் திறமையைப் பாராட்​டும் வகை​யில் இவ்​விழா ஏற்​பாடு செய்யப்பட்​டது. இளம் தலை​முறை​யினர் விடா​முயற்​சி, தன்னம்பிக்​கை, ஒழுக்​கம், அர்ப்​பணிப்​புடன் செயல்​பட்​டால் உலக அளவில் சாதிக்க முடி​யும் என்ற நம்​பிக்​கையை ஏற்​படுத்​தும் வகை​யில் வித்யா ராம்​ராஜின் சாதனை, அமைந்​துள்​ளது.

அவரது சாதனை, விளை​யாட்​டுத் துறை​யில் ஆர்​வ​முள்ள ஆயிரக்கணக்​கான மாணவர்​களுக்கு மிகப்​பெரிய ஊக்​க​மாக விளங்​கு​கிறது. எதிர்​காலத்​தில் அவர்​கள் மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்​துகிறோம். வேலம்​மாள் நெக்​ஸஸ், கல்​வி​யுடன் விளை​யாட்​டுத் திறமை​களை​யும் ஊக்​கு​வித்​து, மாணவர்​கள் தங்​களின் தனித்​திறமை​களை வெளிப்​படுத்​துவதற்கான சிறந்த வாய்ப்​பு​களை​யும், பயிற்சி வசதி​களை​யும் வழங்கி வரு​கிறது” என்​றார்.

முன்​ன​தாக வித்யா ராம்​ராஜ், அவரது தாயார் மற்​றும் பயிற்சியாளர் நேஹ்​பால் சிங் ஆகியோரை அலங்​கரிக்​கப்​பட்ட சாரட் வண்​டி​யில் மாணவர்​கள் ஊர்​வல​மாக அழைத்து வந்து உற்சாக வரவேற்பு அளித்​தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version