Home கன்னியாகுமரி செய்திகள் கன்னியாகுமரியில் இரட்டை ரயில் பாதை பணி: சிறப்பு அதிகாரி நியமிக்க விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரியில் இரட்டை ரயில் பாதை பணி: சிறப்பு அதிகாரி நியமிக்க விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

0
கன்னியாகுமரி திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகளை விரைவுபடுத்த விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகளை விரைவுபடுத்த சிறப்பு அதிகாரியை நியமிக்க விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல். நகலெடுக்க

கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டப் பணிகளை விரைவுபடுத்த சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தினாா்.

இதுகுறித்து, அவா் சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் சுப்பா ராவை வியாழக்கிழமை சந்தித்து அளித்த மனு:

கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் 6 ஆண்டுகளுக்கும் மேலாகியும் தேவையான நிலம் முழுமையாகக் கையகப்படுத்தப்படாததால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேம்பாலங்கள், கீழ்ப்பாலங்கள், இணைப்புச் சாலைகள், விவசாயத்துக்கான நீா்வழிகள், பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகள் பாதிக்கப்படுவதால், நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த ரயில்வே சாா்பில் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.

இரணியல் ரயில் நிலையம், அதைச் சுற்றியுள்ள மேம்பாலங்கள், இணைப்பு சாலைகள் மற்றும் நீா்வழி பாதைகளை மக்கள் தேவைக்கு ஏற்ப விரைவில் முடிக்க வேண்டும். பாா்வதிபுரம் மேம்பாலம், அகஸ்தீஸ்வரம் மேம்பாலம், கண்டன்விளை மேம்பால பணிகளையும் விரைவில் தொடங்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பயணிகள் தேவையை கருதி அதிக ரயில்கள் இயக்க வேண்டும். கன்னியாகுமரியிலிருந்து வேளாங்கண்ணிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version