சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான சிறுவர், சிறுமியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று சிறுவர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் பெரம்பூர் டான்போஸ்கோ அணி 25-20, 22-25, 25-14 என்ற செட் கணக்கில் ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரை இறுதியில் மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் 23-25, 25-21, 25–21 என்ற செட் கணக்கில் முகப்பேர் வேலம்மாள் அணியை தோற்கடித்தது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் டான்போஸ்கோ – செயின்ட் பீட்ஸ் அணிகள் மோதுகின்றன.
சிறுமியர் பிரிவு அரை இறுதியில் டெல்க் மேக்டலின் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணி 25-13, 25-7 என்ற செட் கணக்கில் கோல சரஸ்வதி வைஷ்ணவ் சீனியர் மேல்நிலைப் பள்ளி அணியையும், மயிலாப்பூர் லேடி சிவசாமி பள்ளி 25-19, 25-15 என்ற செட் கணக்கில் பெரம்பூர் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணியையும் தோற்கடித்தன.
இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் மேக்டலின் – லேடி சிவசாமி அணிகள் மோதுகின்றன.
