Home சினிமா செய்திகள் தனுஷ் இயக்கத்தில் நித்யா மேனன்

தனுஷ் இயக்கத்தில் நித்யா மேனன்

0

நடிகை நித்யா மேனன், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வருகிறார். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷுடன் அவர் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ சூப்பர் ஹிட்டானது.இந்தப் படத்துக்காக அவருக்குச் சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், தனுஷுடன் மீண்டும் நடிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். “திருச்சிற்றம்பலம்’ படத்துக்குப் பிறகு தனுஷுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். அவரே அதை இயக்குகிறார். அதுவும் சிறந்த படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version