Home விளையாட்டு செய்திகள் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து

0

பாரா ஆசிய விளை​யாட்​டுப் போட்​டி​யில் தங்கம் வென்ற தமிழக வீரர் சோலைராஜ் தர்மராஜ்,வெண்கலம் வென்ற வீரர் நவீன் சிவகுமார், வீராங்​க​னைகள் மனிஷா ராமதாஸ், நித்ய ஆகியோ​ருக்கு முதல்​வர் விஜய் வாழ்த்து தெரி​வித்து அவர்களுக்கு மொத்தம் ரூ.1.65 கோடி ஊக்​கத்​ தொகை அறி​வித்​துள்​ளார்.

இது​குறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஜப்​பானில் நடை​பெற்​று​வரும் 5-வது பாரா ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் பேட்​மிண்​டன் விளை​யாட்​டில் கலப்பு இரட்​டையர் எஸ்.எல்.3- எஸ்.யு.5 பிரி​வில் வெண்​கலப் பதக்​கம் வென்ற இந்​திய அணிக்​கும், அந்த அணி​யில் இடம்​பெற்​றுள்ள தமிழக வீராங்​கனை மனிஷா ராமதாஸுக்​கும் எனது நெஞ்​சார்ந்த வாழ்த்​துக்​கள். அதேபோல, பேட்​மிண்​டன் விளை​யாட்​டில் கலப்பு இரட்​டையர் எஸ்.ஹெச்.6 பிரி​வில் வெண்​கலப் பதக்​கம் வென்ற இந்​திய அணிக்​கும், அணி​யில் இடம்​பெற்​றுள்ள தமிழக வீராங்​கனை நித்யஸ்ரீக்​கும் எனது மனமார்ந்த வாழ்த்​துகள்.

இப்​போட்​டி​யில் பதக்​கம் வென்ற தமிழக வீராங்​க​னைகள் மனிஷா, நித்ய ஆகியோரின் சாதனையைப் பாராட்​டும் வகை​யில், தமிழக அரசு சார்​பில் தலா ரூ.30 லட்​சம் ஊக்​கத்​தொகை வழங்​கப்​படும். எதிர்​காலத்​திலும் அவர்​கள் பல வெற்​றிகளைப் பெற்று தமிழகத்​துக்​கும், இந்​தி​யா​வுக்​கும் பெருமை சேர்க்க வாழ்த்​துகள். இவ்​வாறு முதல்​வர் தெரி​வித்​துள்​ளார்.

இதேபோல், பேட்​மிண்​டன் விளை​யாட்​டில், ஆண்​கள் இரட்​டையர் பிரி​வில் வெண்​கலப் பதக்​கம் வென்ற இந்​திய அணிக்​கும், அவ்​வணி​யில் இடம்​பெற்​றுள்ள தமிழகத்தை சேர்ந்த வீரர் நவீன் சிவகுமாருக்கு முதல்​வர் விஜய் வாழ்த்​துகளை தெரி​வித்​ததுடன், அவரது சாதனையை பாராட்டி ரூ.30 லட்​சம் ஊக்​கத்​தொகை அறி​வித்​துள்​ளார்.

இதுமட்டுமின்றி, தடகளத்தில் ஆண்கள் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் சோலைராஜ் தர்மராஜ்-க்கு முதல்வர் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதுடன், அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version