ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படம், ‘நிஞ்ஜா’. இதில் பிரார்த்தனா, ஜென்சன் திவாகர், ராதாரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி மற்றும் கல்யாணி நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்தி ரங்களில் நடிக்கின்றனர்.
முருகு இயக்கும் இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக் ஷன்ஸ் சார்பில் எஸ்.சாய் தேவானந்த், கே.எஸ்.சினிஷ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்துக்கு முதலில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க இருந்தார். இப்போது ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் தொடங்கியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெற இருப்பதாகப் படக்குழுவினர் கூறிஉள்ளனர்.
